சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு சான்றிதழ், விருது!

Dec 06, 2020 07:16 AM 385

கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் AYUSH EXCELLENT விருதினை வழங்கினர்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில், கொரோனோ நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் சித்த மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழையும், விருதுகளையும் வழங்கினர். அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாரம்பரிய மருத்துவ முறையில் உயிர் காத்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Comment

Successfully posted