நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்

Oct 09, 2019 09:56 PM 87

நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். ஞானவேல்ராஜா தயாரிக்கும் "மப்டி" என்ற திரைப்படத்தில் நடிக்க நடிகர் சிலம்பரசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பில் ஒரு மாதம் மட்டும் கலந்து கொண்டு சிம்பு நடித்து இருப்பதாகவும் இதனால், கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலை தனக்கு ஏற்பட்டுள்ளதாகவும் ஞானவேல்ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

எனவே, தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரி சேகரிடம் அவர் புகார் மனு கொடுத்துள்ளார்.

Comment

Successfully posted