மீண்டும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள சிம்பு!

Nov 30, 2020 05:02 PM 2600

சிம்புவின் அடுத்த படத்திற்கு மெண்டல் என டைட்டில் வைக்க திட்டமிட்டுள்ளனர்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வரும் சிம்பு, மீண்டும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார். குறைந்த பட்ஜெட்டில் டி.ராஜேந்தர் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு, மெண்டல் என டைட்டில் வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தில், சிம்பு சம்பளம் இல்லாமல் நடிக்க உள்ளதாகவும், படத்தின் மூலம் வரும் வருமானத்தை கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தின் கடனை அடைக்க டி.ராஜேந்தர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், தோற்ற பிறகும், சங்கத்திற்கு உதவும் வகையில் டி.ராஜேந்தர் மேற்கொண்டு வரும் முயற்சி திரையுலகினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted