இரும்புத்திரை இயக்குநருடன் கைகோர்க்கிறார் சிவகார்த்திகேயன்

Nov 03, 2018 01:23 PM 455

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் வெளிவந்து நல்ல விமர்சனங்களையும் வசூல் ரீதியாக நல்ல பெயரையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தை 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில், இதே நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மீண்டும் கைகோர்க்கிறார். சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்ற இரும்புத்திரை படத்தின் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ள இந்தப் படத்தில் நடிகர் அர்ஜூன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

படம் குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Comment

Successfully posted