சிவகாசி  அருகே  பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேருக்கு தீக்காயம்

Aug 14, 2018 11:03 AM 432
பெத்தலுபட்டியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில்  பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள்  நடைபெற்றது. ரசாயன கலவை செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் ஆரோக்கியராஜ் மற்றும் முருகன் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயனைப்பு வீரர்கள் அடுத்தடுத்த அறைகளில் தீ பரவாமல் தடுக்க தீயை அணைத்தனர். ஆலை உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Comment

Successfully posted