தான் ஆண்மையற்றவர் என சிவசங்கர் பாபா வாக்குமூலம்

Aug 24, 2021 07:57 AM 633

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா, தான் ஆண்மையற்றவர் என சிபிசிஐடி போலீசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர்பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தான் ஆண்மையற்றவர் என்றும், தன்னால் எவ்வாறு பாலியல் தொந்தரவு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார். இதே காரணத்தைக் கூறி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்திருந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிவசங்கர் பாபாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர் அமெரிக்காவில் வசித்துவருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், எப்படி ஆண்மையற்றவர் என குறிப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அவரது ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Comment

Successfully posted