அத்திவரதர் தரிசனம்: காஞ்சிபுரத்திற்கு 6 சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கம்

Jul 05, 2019 07:43 AM 309

அத்திவரதர் தரிசனத்திற்காக ஜூலை 6 ஆம் தேதி முதல் காஞ்சிபுரத்திற்கு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து காலை 4.15 மணிக்கும், இரண்டாவது சிறப்பு ரயில் சென்னை கடற்கரையிலிருந்து காலை 4.25 மணிக்கும் புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், மூன்றாவது சிறப்பு ரயில் செங்கல்பட்டில் இருந்து காலை 10.00 மணிக்கும், நான்காவது சிறப்பு ரயில் மதியம் 12.00 மணிக்கும் புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐந்தாவது சிறப்பு ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 3.10 மணிக்கும், ஆறாவது சிறப்பு ரயில் செங்கல்பட்டில் இருந்து மாலை 5.30 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் காஞ்சிபுரத்தில் இருந்து 6 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது. அதன்படி, முதல் சிறப்பு ரயில் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கும் இரண்டாவது சிறப்பு ரயில் காலை 9.50 மணிக்கும் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது சிறப்பு ரயில் பிற்பகல் 12.50 மணிக்கும் நான்காவது சிறப்பு ரயில் மாலை 4.05 மணிக்கும் புறப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஐந்தாவது சிறப்பு ரயில் மாலை 4.30 மணிக்கும், ஆறாவது சிறப்பு ரயில் இரவு 7.45 மணிக்கும் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted