கந்த சஷ்டி கவசம் மீது அவதூறு - கைது!

Jul 15, 2020 10:16 PM 2884

யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி குறித்து அவதூறாக வீடியோ பதிவிட்ட சென்னை வேளச்சேரியை சேர்ந்த செந்தில் வாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்தவழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரியைச் சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted