புதுமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயம், பெட்ரோல் பரிசு!

Feb 18, 2021 03:54 PM 1804

சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுக்கு பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு பரிசாக வழங்கப்பட்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மதுரவாயலை சேர்ந்த கார்த்திக்-சரண்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கார்த்திக்கின் நண்பர்கள் புது மண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயம், ஐந்து லிட்டர் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவை பரிசாக மேடையில் வழங்கினர். குடும்பத்திற்கான அடிப்படை தேவை என்பதை உணர்த்தும் வகையில் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

image

 

Comment

Successfully posted