கிரிக்கெட் விளையாட வந்த ‘பாம்பு’- தெறித்து ஓடிய வீரர்கள்

Dec 09, 2019 03:56 PM 1452

விஜயவாடாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் மைதானத்தில் பாம்பு வந்ததால் ஆட்டம் தடைபட்டது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் விதர்பா - ஆந்திரா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா கேப்டன் ஃபையஸ் ஃபஸல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து போட்டி பேட்டிங் ஆட ஆந்திரா அணி வீரர்களும், ஃபீல்டிங் செய்ய விதர்பா அணி வீரர்களும் உற்சாகமாக மைதானத்துக்குள் நுழைந்தனர். ஆனால் இரு அணி வீரர்களுக்கும் மைதானத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவர்களுக்கு முன்பாகவே பாம்பு ஒன்று நுழைந்து ஆட்டம் காட்டியது.

மைதானத்தில் அங்குமிங்கும் சென்ற பாம்பால் ஆட்டம் ஆரம்பமாக சிறிது காலதாமதமானது. அதன்பின் விரைந்து வந்த ஊழியர்கள் பாம்பை மைதானத்திலிருந்து அப்புறப்படுத்திய பிறகே ஆட்டம் தொடங்கியது. இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Comment

Successfully posted