தலைமைச் செயலகத்துக்குள் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Sep 11, 2019 08:46 PM 323

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள 4-வது எண் நுழைவாயிலில் நல்லபாம்பு குட்டி புகுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் 10 நுழைவாயில்கள் உள்ளன. 4-வது எண் நுழைவாயில் வழியாக துணை முதலமைச்சர் அறை, சட்டப்பேரவைக்கு செல்லும் வழி, செய்தியாளர்கள் அறை உள்ளிட்ட அறைகளுக்கு செல்ல முடியும்.

மொகரம், ஓணம் பண்டிகை காரணமாக அரசு விடுமுறை நாளான இன்று தலைமை செயலகத்தில் ஊழியர்கள் யாரும் வரவில்லை. இந்த நிலையில் 4-வது நுழைவாயிலில் நல்லபாம்பு குட்டி ஒன்று நுழைந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அந்தப் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டது. 

Comment

Successfully posted