சோப்பு விற்பதுபோல் நாடகமாடி பல லட்சம் ரூபாய் மோசடி

Oct 15, 2019 09:31 PM 236

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சோப்பு விற்பதுபோல் நாடகமாடி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுக்காவைச் சேர்ந்த சிலட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் தங்கராசு.விவசாய கூலி வேலை பார்த்துவரும் இவரிடம் சில நாட்களுக்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள், தாங்கள் விற்கும் சோப்பில் பரிசுக் கூப்பன் உள்ளது என்றுக் கூறி விற்றுச் சென்றுள்ளனர்.

பின்னர், மூன்று நாட்கள் கழித்து தங்கராஜை கைபேசியில் தொடர்பு கொண்ட அந்த நபர்கள் உங்களுக்கு ஸ்கூட்டி பரிசாக விழுந்துள்ளது, நாங்கள் கொடுக்கும் அக்கவுண்டுக்கு 15 ஆயிரம் பணம் போட்டுவிடுங்கள் என்று கூரியுள்ளனர்.முதலில் பணம் போடுவதற்கு மறுத்த தங்கராசு அவர்கள் பேச்சில் ஏமாந்து பணத்தை கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அவரிடம் பேசிய மர்ம நபர்கள் முதல் பரிசு விழுந்த நபர் காரை வாங்க மறுக்கிறார் எனவே 35 ஆயிரம் எங்கள் கணக்கில் போட்டுவிட்டு அந்தக் காரை நீங்களே வாங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டுள்ளனர்.

அந்தத் தொகையையும் மர்ம நபர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திய் தங்கராசு, அந்த நபர்கள் மேலும் தொகை கேட்டதும் சுதாரித்துக் கொண்டு அவர்களிடம் பேசிக் கொண்டே காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளார்.

அதனை தொடர்ந்து அந்த நபர்கள் பேசிக்கொண்டிருக்கும் இடத்தைக்  கண்டுபிடித்த  காவல்துறையினர் அவர்களை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மேலும், மோசடியில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில்,

அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலை சேர்ந்த காந்தி, பேச்சிமுத்து என்பதும், இவர்கள் இது போன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதுமட்டுமல்லாது, இவர்கள் பல குழுக்களாக பிரிந்து தொடர்ந்த பல நபர்களிடம் மோசடி செய்துவந்ததும் தெரிய வந்துள்ளது.

Comment

Successfully posted