தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வளையத்தில் சமூக வலைத்தள கணக்குகள்

Apr 08, 2019 01:29 PM 302

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சமூக வலைத்தள கணக்குகள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன.

இந்தாண்டு முதல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவில் சொத்து விபரம், கல்வித்தகுதி, கிரிமினல் வழக்குகள் போன்றவற்றை குறிப்பிடுவதுடன், சமூக வலைத்தள கணக்கு விபரங்களையும் குறிப்பிடுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் தொடர்ந்து ஆவணம் இல்லாத அவதூறு செய்திகளை, சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புகிறார்களா என ஆய்வு செய்யப்பட்டு தேர்தல் பார்வையாளர்களுக்கும், ஊடக கண்காணிப்பு பிரிவுக்கும் தகவல்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன. இதன்மூலம் தொடர்ந்து அவதூறு பரப்பினால் வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதால், ஆதாரமில்லாமல் போலியாக அவதூறு பரப்பும் கட்சிகளும், வேட்பாளர்களும் அச்சமடைந்துள்ளனர்.

Comment

Successfully posted