திருப்பதி அருகே பெற்ற மகனே தந்தை கழுத்தை நெரித்து கொலை

Jul 12, 2019 08:36 PM 55

திருப்பதி அருகே , முதியோர் உதவித் தொகையை கொடுக்க மறுத்த தந்தையை பெற்ற மகனே, குடிபோதையில் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த மெஹபூப் சாஹிப் என்பவருக்கு முதியோர் உதவி தொகையாக 2 ஆயிரத்து 250 ரூபாய் கிடைத்து வருகிறது.. இந்நிலையில், குடிபழக்கத்திற்கு அடிமையான அவருடைய மகன் ஷேக் ஷீலாத் என்பவர், முதியோர் உதவி தொகையை கொடுக்குமாறு தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மெஹபூப் பணத்தை கொடுக்க மறுத்ததை அடுத்து, அவரை கடுமையாக தாக்கிய ஷேக் ஷீலாத் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் மயக்கம் அடைந்த மெஹபூப் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மெஹபூப் சாஹிப் உயிரிழந்துள்ளார். தந்தை தாக்கப்பட்ட வீடியோவை ஷேக் ஷீலாத்தின் தங்கை காவல்துறையிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஷேக் ஷீலாத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted