சிறுமியை செல்போனில் தவறாக படம் பிடித்த திமுக நிர்வாகியின் மகன்கள்!

Aug 12, 2020 10:02 PM 581

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே 16வயது சிறுமியை செல்போனில் தவறாக படம் பிடித்த சம்பவத்தில், திமுக நிர்வாகி மற்றும் அவரது மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சொட்டமாயனுரை சேர்ந்த திமுக நகர விவசாய அணி அமைப்பாளர் வி.சி.ராஜேந்திரன் என்பவரின் மகன்களான பாண்டிய ராஜன் மற்றும் சேரன் ராஜன் ஆகியோர் தென்னம்பட்டி குளத்தில் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, இயற்கை உபாதை கழிக்க வந்த 16வயது சிறுமியை பாண்டியராஜன் தமது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனைக் கண்ட சிறுமி கூச்சலிட்டதால், ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வி.சி.ராஜேந்திரன் பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஜாதியின் பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த வடமதுரை காவல்துறையினர், சேரன் ராஜன் மற்றும் மணல் திருட்டில் ஈடுபட்ட முத்துக் குமாரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய பாண்டியராஜன் மற்றும் திமுக நிர்வாகி வி.சி.ராஜேந்திரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted