பிரபஞ்ச அழகியாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு

Dec 09, 2019 05:46 PM 610

நடப்பு ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 

68- வது மிஸ் யூனிவர்ஸ் போட்டிகள் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் போட்டியிட்டனர். அவர்களை பின்னுக்கு தள்ளி தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சொசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக முடிசூட்டப்பட்டார். 26 வயதான துன்சி மிஸ் தென்னாப்பிரிக்காவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு 2018ம் ஆண்டில் பிரபஞ்ச அழகியாக தேர்வான பிலிப்பைன்ஸ் அழகி காட்ரியோனா கிரே, மகுடத்தை சொசிபினி துன்சிற்கு சூட்டினார். பியூர்ட்டோ ரிக்கோவைச் சேர்ந்த மேடிசன் ஆண்டர்சன் 2வது இடத்தையும், மெக்ஸிகோவைச் சேர்ந்த சோபியா அரகன் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

 

Comment

Successfully posted