குடியரசு தின விழாவில் தென்னாப்பிரிக்க அதிபர் பங்கேற்கிறார் - பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவு

Dec 02, 2018 10:01 AM 293

அடுத்த மாதம் நடைபெற உள்ள இந்திய குடியரசு தின விழாவில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்து கொள்வதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

70-வது இந்திய குடியரசு தின விழா மற்றும் 150-வது மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா கலந்து கொள்கிறார். அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்க அதிபரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்க அதிபரை சந்தித்தது மகிழ்ச்சி என்றும், குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிரில் ரமபோசாவின் வருகையால் இரு நாடுகளுக்கிடையேயான உறவு மேம்படும் என்றும் பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Comment

Successfully posted