விறுவிறுப்பாக நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நிறைவு

Jun 23, 2019 06:40 PM 69

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த தேர்தலில் விஷால், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், ஐசரி கணேஷ், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதின. சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காலை ஏழரை மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர்கள் கமல், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் நடிகைகள் குஷ்பூ, ரேகா, சினேகா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் வாக்களித்து சென்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. மூன்றாயிரத்து 171 பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற நிலையில், ஆயிரத்து 587 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டன. நீதிமன்ற அனுமதிக்கு பிறகு அடுத்த மாதம் 8-ம் தேதிக்கு பிறகு வாக்குகள் எண்ணப்படலாம் என்று தெரிகிறது.

Comment

Successfully posted