தென் மாநிலங்களில் படிப்படியாக மழை குறையும்

Aug 17, 2018 01:11 PM 509

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களின் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் வரலாறு காணாத மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் மாநிலங்களில் மழையின் தீவிரம் இன்று முதல் படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

Comment

Successfully posted