கேரளாவில் தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும்

May 15, 2019 04:50 PM 95

கேரளாவில், தென்மேற்கு பருவமழை 5 நாட்கள் தாமதமாக துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வழக்கமாக தென்மேற்கு பருவ மழை ஜூன் 1 ஆம் தேதி துவங்கும். ஆனால், நாடு முழுவதும் பல இடங்களில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், இந்த ஆண்டு, தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட 5 நாட்கள் தாமதமாக துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்திற்கும் பருவமழை தாமதமாகும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அந்தமான் கடல் பகுதிகளின் தெற்குப் பகுதிகள் மற்றும் நிகோபார் தீவுகள், அதை ஒட்டியுள்ள வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் மே 18, 19 ஆகிய தேதிகளில், தென்மேற்கு பருவ மழை துவங்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted