கேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவ மழை!

Jun 01, 2020 11:51 AM 545

 கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியதால், பெரும்பாலான பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு ஜூன் முதல் வாரத்தில் கேரளாவில் துவங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், திருவனந்தபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவ மழை துவங்கிய நிலையில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted