பொங்கலையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் விவசாயிகளுக்கு சிறப்பு ஏற்பாடு

Jan 11, 2019 03:24 PM 122

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் விவசாயிகள் நேரடியாக தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 17ம் தேதி வரை விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை நேரடியாக இங்கு வந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோயம்பேடு வணிக வளாக பகுதியில் பிரத்யேகமாக 7 ஏக்கர் பரப்பளவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் தங்களின் பொருட்களை விற்பனை செய்ய முடியும். கரும்பு, மஞ்சள், இஞ்சி, வாழை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் விற்பனை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comment

Successfully posted