நதிநீர் பிரச்சனை தொடர்பாக கேரளாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்புக் குழுக்கள்: தமிழக அரசு

Oct 17, 2019 04:13 PM 123

கேரளா உடனான நதிநீர் பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரண்டு சிறப்புக் குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது.

தமிழகம் - கேரளா இடையே நிலவும் நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரு மாநில முதலமைச்சர்களுடன் கடந்த மாதம் 25-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குழுக்களை அமைத்து சுமூகத் தீர்வு காண்பது என முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்யவும், பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்தவும் இரண்டு குழுக்களை தமிழக அரசு அமைத்துள்ளது. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் குறித்த குழுவில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதேபோன்று, பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தை செயல்படுத்தவும் குழு அமைத்து தமிழக அரசு, ஆணை வெளியிட்டுள்ளது.

Comment

Successfully posted