898 பெண்களுக்கு ரூ.45 லட்சம் மதிப்பிலான சிறப்பு கடனுதவி!

May 22, 2020 04:11 PM 671

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில், 898 மகளிர்க்கு, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிறப்பு கடனுதவியை அமைச்சர் கேசி. கருப்பணன் வழங்கினார்.அம்மாபேட்டையில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கேசி. கருப்பணன் பங்கேற்று, பெண்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு  கடன் உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 72 குழுக்களைச் சேர்ந்த 898 பெண்களுக்கு, 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றி அதை பெற்றுச் சென்றனர். இந்நிகழ்வில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன், மத்திய கூட்டுறவு
வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட வங்கி அதிகாரிகளுடன், ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர்.
 

Comment

Successfully posted