மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்!!

Jul 12, 2020 12:38 PM 1542

மயிலாடுதுறை மாவட்டத்தின் சிறப்பு அதிகாரியாக, ஐஏஎஸ் அதிகாரி லலிதா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டத்தின் கீழ் இருந்து வந்த மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 24ம் தேதி, சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு எல்லைகளை உருவாக்கும் வகையில், அம்மாவட்ட சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி லலிதாவை தமிழக அரசு நியமித்துள்ளது. இதேபோல், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ஸ்ரீநாதா, மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Comment

Successfully posted