கோடை விடுமுறையை முன்னிட்டு கால்பந்து சிறப்பு பயிற்சி

May 27, 2019 09:53 AM 49

அம்பத்தூரில் பல்நோக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர, அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பத்தூரை அடுத்த ஒரகடம் பகுதியில், கோடை விடுமுறையை முன்னிட்டு சிறுவர்களுக்கான சிறப்பு கால்பந்து பயிற்சி முகாம் கடந்த 20 நாட்களாக நடைபெற்றது. பயிற்சி நிறைவு பெற்றதை அடுத்து காட்சிப் போட்டி நடைபெற்றது. பயிற்சியில் சுமார் 50 மாணவர்கள் பங்கேற்றனர். இலவசமாக அளிக்கப்படும் பயிற்சியில் சிறுவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், அரசு சார்பில் பல்நோக்கு விளையாட்டு திடல் அமைத்து தர அப்பகுதியின் கால்பந்து விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted