போப் பிரசங்கத்தில் ஸ்பைடர் மேன்???

Jun 23, 2021 04:19 PM 1432

வாட்டிகனில், போப் பிரான்சிஸ் நடத்திய நிகழ்வில், ஸ்பைடர்மேன் உடையுடன் பங்கேற்றவர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

வாரந்தோறும் போப் நடத்தும் பொது பார்வையாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில், இக்காட்சி அரங்கேறியுள்ளது.

போப்பின் பேச்சை ஸ்பைடர் மேன் உடையணிந்த நபர் கேட்டதாகவும், முகமூடி அணிந்திருந்ததால் அவர் பீட்டர் பார்க்கர் தானா என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும் மற்ற பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வானில் நூல்விட்டாலும், மண்ணில் இருந்தாலும் ஸ்பைடர் மேன் கெத்துதான்!

 

 

Comment

Successfully posted