தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது

Apr 29, 2021 08:07 AM 288

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வரும் நிலையில், தினசரி தொற்று எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ளது.

ஒரே நாளில் 15 ஆயிரத்து 114 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளிநாடுகள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 35 பேர் உள்பட, புதிதாக 16 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், பத்தாயிரத்து 239 பேர் ஆண்கள், 6 ஆயிரத்து 426 பேர் பெண்கள் ஆவர்.

சென்னையில் புதிதாக 4 ஆயிரத்து 764 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. பிற மாவட்டங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 901 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆயிரத்து 219 பேரும், கோவை மாவட்டத்தில் 963 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் 751 பேரும், நெல்லை மாவட்டத்தில் 714 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 594 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில், மொத்த பாதிப்பு 11 லட்சத்து 30 ஆயிரத்து 167ஆக அதிகரித்த நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 6 ஆயிரத்து 33 ஆக உள்ளது.

தற்போது, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Comment

Successfully posted