ஸ்குவாஷ் வீராங்கனை அபராஜிதாவுக்கு இளம் சாதனையாளர் விருது

Nov 16, 2019 02:50 PM 179

சென்னை பூந்தமல்லியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற விழாவில் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அபராஜிதா பாலமுருகனுக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படார்.

சென்னை பூந்தமல்லியிலுள்ள தனியார் பல்கலைக்கழக நிறுவன தின விழா கொண்டாடப்பட்டது. பல்கலைகழக நிறுவனர் வீரய்யன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அபராஜிதா பாலமுருகன், நீதியரசர் ஞானபிரகாசம் பங்கேற்றனர். விழாவில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவில் பல்கலைக்கழகத்தின் சார்பில் அபராஜிதா பாலமுருகனுக்கு இளம் சாதனையாளர் விருதும், நீதியரசர் ஞானபிரகாசத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Related items

Comment

Successfully posted