மழையால் தடைபட்ட இலங்கை, வங்கதேசம் மோதும் போட்டி

Jun 11, 2019 05:57 PM 71

உலககோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதும் 16 வது லீக் போட்டி மழையால் தாமதமாகியுள்ளது. 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 16வது லீக் போட்டியில், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி, மஷ்ரஃபி மோர்தஸா தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒரு பேட்டியில், வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் கண்ட நிலையில், பாகிஸ்தானுடனான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல், வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நிலையில், நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் போட்டி பிரிஸ்டலில் துவங்க இருந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், ஆட்டம் தடைபட்டுள்ளது.

Comment

Successfully posted