மழையால் கைவிடப்பட்ட இலங்கை - வங்கதேசம் போட்டி

Jun 11, 2019 08:45 PM 79

உலககோப்பை கிரிக்கெட் தொடரில், இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதும் 16 வது லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் 16வது லீக் போட்டியில், கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி, மஷ்ரஃபி மோர்தஸா தலைமையிலான வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒரு போட்டியில், வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் கண்ட நிலையில், பாகிஸ்தானுடனான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல், வங்கதேச அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நிலையில், நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் போட்டி பிரிஸ்டலில் துவங்க இருந்த நிலையில் மழை பெய்து வந்தது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால், ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

Comment

Successfully posted