கிரீசுக்கு வெளியில் நின்றிருந்த வீரரை ரன் அவுட் செய்யாத இலங்கை வீரர்

Dec 12, 2019 09:46 PM 1398

கையில் அடிபட்டு கிரீசுக்கு வெளியில் நின்றிருந்த எதிரணி வீரரை ரன்-அவுட் செய்யாமல் விட்ட இலங்கை வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் உதனா தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில் பங்கேற்று பார்ல் ராக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் நெல்சன் மண்டேலா பே ஜெயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் உதனா வீசிய பந்தை மண்டேலா வீரர் குன் அடித்தார். அது சகவீரர் மரியாஸ் கையில் பலமாக தாக்கியது. மரியாசை தாக்கிய பந்தை எடுத்த உதனா ரன் அவுட் செய்ய முயன்றார்.

அப்போது வலியால் துடித்து கொண்டிருந்த மரியாஸ் கிரிஸை விட்டு நீண்ட தூரம் நின்றார். உதனா எளிதாக ரன் அவுட் செய்யலாம் என்றாலும் பந்து பட்டு வலியால் துடித்த வீரரை ரன் அவுட் செய்யாமல் இருந்தார். உதானாவின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related items

Comment

Successfully posted