தமிழக மீனவர்களை சிறைபிடித்து சென்ற இலங்கை கடற்படை

Feb 16, 2020 04:05 PM 452

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் மற்றும் ஜெகதாபட்டிணம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 337 விசைப் படகுகளில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 11 மீனவர்கள் மற்றும் விசைப் படகுகளை சிறைபிடித்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted