இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

Sep 19, 2019 06:52 AM 291

இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி 8ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல்கள் ஆணையக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்குகிறது. ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஜே.வி.பி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து தேர்தலுக்கு தயாராகி விட்டன. ஆனால், அதிபர் சிறிசேனவின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வேட்பாளர்கள் தேர்வில் அதிபர் சிறிசேனா தீவிரம் காட்டி வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து இலங்கை அரசியலில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

Comment

Successfully posted