இந்தியா என்னை கொல்ல சதி செய்யவில்லை - இலங்கை அதிபர் திட்டவட்ட மறுப்பு

Oct 17, 2018 08:31 PM 756

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன, தன்னை கொலை செய்ய இந்தியாவின் உளவு அமைப்பான ரா சதி செய்ததாக குற்றம்சாட்டியதாக ஒரு தகவல் அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

இந்நிலையில் இந்த தகவலை இலங்கை அதிபர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரதமர் மோடி தனக்கும், இலங்கைக்கும் உண்மையான நண்பர் என குறிப்பிட்டுள்ளார். இந்தியா, இலங்கை இடையேயான உறவை தான் மிகவும் மதிப்பதாகவும், அது தொடர வேண்டும் என விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்திய தூதரை அழைத்து தான் விளக்கம் அளித்துள்ளதாகவும் சிறி சேன கூறியுள்ளார்.

Comment

Successfully posted