தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

Jan 10, 2019 03:52 PM 159

இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் எட்டு பேரை விடுவிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுந்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்களை கடந்த ஜனவரி 7-ம் தேதி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். அவர்களை சிறையில் அடைக்க ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டது.

Comment

Successfully posted