இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் பின்னணியில் அரசியல் தலையீடு: இலங்கை பிரதமர்

May 16, 2019 10:46 AM 96

ஈஸ்டர் நாளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் அரசியல் இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி நகருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.

கொட்டம்பாபிடிய பகுதிக்கு சென்ற பிரதமர் ரணில், அங்கு தாக்குதலுக்கு இலக்கான மஸ்ஜிதுல் ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல்களுக்கு சென்று பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தாக்குதல் நடத்துவதற்காக வாகனங்களில் வந்தவர்களின் பதிவுகள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளை சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தாக்குதலில் தொடர்புடையவர்கள், காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார்.

Comment

Successfully posted