திமுக முன்னாள் எம்.பிக்கு சொந்தமான நிறுவனத்தில் ஊழியர்கள் போராட்டம்

Jun 25, 2019 06:14 PM 78


திமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், திமுக நிர்வாகியுமான கே.சி. பழனிச்சாமிக்கு சொந்தமான நிறுவனம் மாயனூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். சமீபகாலமாக ஊழியர்களுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், அந்நிறுவனத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து வேலை புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. ஊதியம் வழங்குவதில் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Comment

Successfully posted