ஸ்டாலினின் அறிவுரை ஏற்காத சட்டமன்ற திமுக உறுப்பினர்

Sep 15, 2019 07:00 AM 263

வரவேற்பு பலகை வைப்பது தொடர்பாக, ஸ்டாலினின் அறிவுரையை திமுக சட்டமன்ற உறுப்பினரே மீறியிருப்பது, மக்களிடையே அக்கட்சி மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பேனர் வைக்கக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய பிறகும், சாலை முழுவதும் திமுக பேனர் வைக்கப்பட்ட விழாவில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் ராஜா கலந்துகொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரபாக்கத்தில் நடந்த, திமுக வட்ட செயலாளர் இல்ல விழாவிற்கு பங்கேற்க வந்த தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவிற்கு, வழிநெடுகிலும் பேனர்கள் மற்றும் கட்சி கொடிகள் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு அளிக்கும் வகையில் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் திமுக மீது அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் பேச்சுக்கு, திமுகவினர் மத்தியில் மரியாதை இல்லாததே இந்நிகழ்வு காட்டுவதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comment

Successfully posted