ஸ்டாலின், சீமானுக்கு தமிழ் கடவுள் முருகனின் வேல் பூஜையில் கலந்து கொள்ள அழைப்பு!!

Aug 08, 2020 09:59 PM 507

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் வேல் பாராயணம் நடைபெற்றது. வழக்கத்துக்கு மாறாக மலைக்கோவிலை வலமிருந்து இடமாக கிரிவலம் வந்து வேல்பாராயணம் செய்தனர். இது போல செய்வதால், முருகனை பழிப்பவர்களுக்கு தீமை நேரிடும் என தெரிவித்தனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி சேதுராமன், ஞாயிற்றுக்கிழமை ஆடி சஷ்டியை முன்னிட்டு அனைவரது வீட்டின் வாசல்களிலும் வேல்பூஜை செய்து கந்தசஷ்டியை பாராயணம் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தங்களை தமிழர்கள் எனக் கூறிக்கொள்ளும், ஸ்டாலினும், சீமானும் கலந்து கொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டார்..

((
பழனி, திண்டுக்கல்

தமிழ் கடவுள் முருகபெருமானுக்கு வேல்பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது

தமிழர்கள் என கூறிக்கொள்ளும் ஸ்டாலினும், சீமானும் பங்கேற்க வேண்டும்

Comment

Successfully posted