சுஜித் விவகாரத்தில் ஸ்டாலின் மட்டுமே குற்றம் சாட்டுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார்

Oct 30, 2019 11:41 AM 204

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தமிழக அரசு மேற்கொண்ட பணியை, உலகமே பாராட்டி வரும் வேளையில், காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் மட்டும் குற்றம்சாட்டுவதாக, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

முத்துராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள தேவரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், கடம்பூர் ராஜு, பெஞ்சமின், நிலோபர் கபில் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், நல்லது செய்யும் அரசின் மீது, காழ்ப்புணர்ச்சியோடு குற்றம்சாட்டுவதையே ஸ்டாலின் வேலையாகக் கொண்டு இருப்பதாக விமர்சித்தார். சுஜித்தை மீட்க அரசு மேற்கொண்ட முயற்சிகளை, உலகமே பாராட்டி வரும் வேளையில், ஸ்டாலின் மட்டுமே குற்றம்சாட்டுவதாகவும் அவர் கூறினார்.

Comment

Successfully posted