திமுகவை அழிக்க ஸ்டாலினே போதும், வேறு யாரும் தேவையில்லை - அமைச்சர் சி.வி.சண்முகம்

Dec 31, 2020 11:14 AM 8224

திமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை என்றும், அக்கட்சியின் தலைவரான ஸ்டாலின் ஒருவரே போதும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர வைக்க வேண்டுமென்ற எழுச்சி, இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கொடுத்து அழகு பார்க்கும் கட்சி அதிமுக என்றும், குடும்ப கட்சியான திமுகவில் கருணாநிதி குடும்பத்தினருக்கு மட்டும்தான் பதவி கிடைக்கும் என்றும் விமர்சித்தார். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று விமர்சித்த அமைச்சர் சி.வி.சண்முகம், திமுகவிற்கு எதிரியே ஸ்டாலின்தான் என்றும், ஸ்டாலினுக்கு எதிரி அவருடைய நாக்குதான் என்றும் விமர்சித்தார்.

Comment

Successfully posted