முதலமைச்சரை பற்றி விமர்சிக்க ஸ்டாலினுக்கு தகுதி இல்லை- நிர்மலா பெரியசாமி

Jan 24, 2020 07:02 AM 216

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி விமர்சிக்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு துளியும் தகுதியும் இல்லை என அதிமுக தலைமை கழக பேச்சாளரும், செய்தி தொடர்பாளருமான நிர்மலா பெரியசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு திருச்செங்கோடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன். சரஸ்வதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய நிர்மலா பெரியசாமி , ஸ்டாலினுக்கு மு.க என்ற இனிசியல் தவிர வேறு என்ன தகுதி இருக்கிறது என்று விமர்சனம் செய்தார்.

Comment

Successfully posted