ஊழல் குறித்து பொய்யாக பேசிவருகிறார் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி

Apr 08, 2019 01:25 PM 185

ஊழல் குறித்து பொய்யாக பேசிவரும் ஸ்டாலின், 2ஜி வழக்கில் சிறை சென்றவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது ஏன் என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். ஊழல் குறித்து பொய்யாக பேசிவரும் ஸ்டாலின், 2ஜி வழக்கில் சிறை சென்றவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது ஏன் என கேள்வி எழுப்பினார். கொடநாடு விவகாரத்தில் குற்ற வழக்கில் ஈடுபட்ட கூலிப் படையினருக்கு, ஸ்டாலின் ஜாமின் எடுக்க துணைபுரிகிறார் என்றால், இந்த விவகாரத்தில் இருக்கும் அரசியலை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Comment

Successfully posted