ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்!- சுயேட்சை வேட்பாளர் புகார்

Apr 22, 2021 05:02 PM 2176

 

இது தொடர்பாக கொளத்தூர் தொகுதியின் சுயேட்சை வேட்பாளரான விஜயகுமார் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 4ஆம் தேதி கொளத்தூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் நாகராஜன் என்பவரின் திருட்டு போன இருசக்கர வாகனத்தில் இருந்து, 2 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த பணத்தை தான் காவலர்கள் பறிமுதல் செய்துள்ளதாக சுயேட்சை வேட்பாளர் கூறியுள்ளார். இதன் மூலம் வாக்காளர்களுக்கு திமுகவினர் பணம் விநியோகம் செய்திருப்பது தெரியவந்துள்ளதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். பணம் விநியோகம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கை சிபிஐ வசமிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் சுயேட்சை வேட்பாளர் விஜயகுமார் மனுவில் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted