ஆதாரமில்லாமல் அவதூறாக பேசிய ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

Apr 05, 2019 09:24 AM 124

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து ஆதாரமில்லாமல் அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் உள்ளிட்டவைகளில் அமைச்சர் வேலுமணியை தொடர்பு படுத்தி ஆதாரமில்லாமல் பல்வேறு அவதூறுகளை கூறியுள்ளார்.

இதையடுத்து, அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து, அவதூறாக பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், தேர்தல் முடிவை மாற்றும் வகையில் பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comment

Successfully posted