பாலிவுட் நடிகரிடம் 2 வாழைப்பழத்தை ரூ.440 க்கு விற்ற ஸ்டார் ஹோட்டல்

Jul 25, 2019 03:33 PM 1051

சண்டிகரில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டல் 2 வாழைப்பழத்தை ரூ.440 க்கு வாங்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ராகுல் போஸ் பகிர்ந்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான ராகுல் போஸ் தனது அடுத்தப்பட ஷூட்டிங்கிற்காக சண்டிகரில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளார். அதிகாலை உடற்பயிற்சிக்கு பிறகு ஹோட்டல் நிர்வாகத்திடம் 2 வாழைப்பழங்கள் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வந்த வாழைப்பழத்திற்கான பில்லை பார்த்தவர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார்.

2 வாழைப்பழங்களுக்கு ரூ.442க்கு பில்லடித்து கொடுத்துள்ளது ஹோட்டல் நிர்வாகம். வாழைப்பழங்கள் 375 ரூபாயும், ஜிஎஸ்டியாக 67 ரூபாயும் என கணக்கிடப்பட்டு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து செல்பி வீடியோவுடன் ஹோட்டல் நிர்வாகத்தை நினைத்து அவர் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

Comment

Successfully posted