அடுத்த ஆண்டு நீட் தேர்விற்கான ஆன்லைன் பதிவு இன்று தொடக்கம்

Nov 01, 2018 10:21 AM 454

பிளஸ்-2 மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் பதிவு இன்று துவங்குகிறது.

2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் மே 5-ல் நடத்தப்படுகிறது. தேர்வின் முடிவுகள், ஜூன், 5ல் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை, தமிழ் உள்பட 10-க்கும் மேற்பட்ட மாநில மொழிகளில், வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக என்.டி.ஏ.,வின், www.nta.ac.in என்ற இணையதளத்தில், நவம்பர் 30-ம் தேதி வரை, மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யலாம்.

நீட் தேர்விற்காக தமிழகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted