நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்!

Aug 13, 2020 04:59 PM 253

நேர்மையாக வரி செலுத்துவோரை ஊக்குவிப்பது, நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்லும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவப்படுத்தும் திட்டத்தை, பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வரி செலுத்தும் முறையை எளிமைப்படுத்துவதன் மூலம், புதிதாக வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என தெரிவித்தார். நாட்டின் நலத்திட்டங்களை நிறைவேற்ற வரி வசூல் மிகவும் முக்கியம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, வரி விதிப்பில் செய்யப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்றும் தெரிவித்தார். நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேற்றம் அடையும் என்றும், சீர்திருத்தங்களுக்கான சிந்தனை மற்றும் அணுகுமுறை மாறியுள்ளன எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

முன்னதாக, பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோர் ரீபண்ட் பெறுவதற்கான வழிமுறை எளிதாக்கப்பட்டுள்ளது என்றும், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிப்பதே பிரதமரின் கொள்கையாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted