டிக்டாக்கில் நடிகை பெயரில் போலி கணக்கு தொடங்கி பணம் வசூல்

Mar 17, 2020 11:43 AM 1248

டிக்டாக்கில் பிரபலமான பெண், நிர்வாணமாக நேரலையில் வருவதாக கூறி வசூலில் ஈடுபட்ட கும்பல் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த நடிகை இலக்கியா, ஜாம்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இவரது பெயரில் சமூக வலைதளங்களில் போலியான முகவரியில் டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு நிர்வாணமாக நேரலையில் வர உள்ளதாக ஒரு கும்பல் விளம்பரம் செய்துள்ளது. நேரலையை பார்ப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த டிக்டாக் பிரபலம் இலக்கியா, இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது பெயரில் போலி டிக்டாக் முகவரியை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென நடிகை இலக்கியா கேட்டுக்கொண்டார்.

Comment

Successfully posted